ஏங்கவைக்கும் எதிர்கவைக்கும்
சூடேற்றும் குளிரவைக்கும்
சாதிக்கவைக்கும் சாகடிக்கும்
சிறப்புத் தரும் சிரமம் தரும்
ஏற்றம் தரும் உணவு தரும்
உழைக்க வைக்கும் உதைக்கவும் வைக்கும்
சிந்தித்து பயன் படுத்தா விட்டால்
சந்தி சிரிக்க வைக்கும்!
செயல்கள் அனைத்தும் இதற்காக
மனிதன் வாழ நினைப்பதும் இதற்காக
பேதம் பிறந்தது இதனாலே
மனிதன் மிருகமாகி போனதும் இதனாலே
பணம் என்று கூறிட பிணம் கூட வாய்பிளக்கும்
பணப்பித்து நீங்கிவிட உயிர்தப்பித்து விடும்
No comments:
Post a Comment