வாசலாம் வாசல் சொர்கவாசல்
ஒதுங்க இடம் இல்லாத மக்கள்
நடுத்தெருவில் ஊசல்
நடை திறக்க கண்டவரெல்லாம்
அடைவாரா சொர்கம்
நடை தவரியவருமா அதில் அடக்கம்
கல்லுக்கோ இங்கு வைர மாலை?
அஃதோ கல்லுடைப்பவன் வீட்டிலோ
கொதிக்கலையே உலை...!
ஒரு காலை வேளை
மேகத்தின் நடுவே சூரியன் மறைந்த நிலை
அதோ மக்கள் அலை
இடம் உழவர் சந்தை.
இலை முதல் காய்வரை பசுமையாய்
நானும் அந்த அலையில் ஒருவனாய்
கையில் பிடித்திருந்தேன் புளிச்சக்கீரை
அருகே வந்தால் ஒரு கிழவி
ரவிக்கை இல்லாத துறவி
கீரை விலை என்ன என வினவி
நான்கு ரூபாய் என்றேன்
ஒன்றா இரண்டா என்றால் கட்டு
ஒன்றுதான் என்று சொல்லி நகைத்தேன்
வாய்ப்பிளந்தால் சத்த மிட்டு
விலைவாசியின் ஏற்றம்
அவள் சுருங்கிய முகத் தோற்றம்
மறைந்தால் தளர் நடையுடன் ....அலையில்!
உயங்ங்... உயங்ங்....
என்ற மந்திரம் சொல்வாயோ!
மனிதனை போர்வைக்குள் ஒழிந்திட செய்வாயோ!
சுகாதார சீர்கேட்டின் குழந்தை நீயோ!
மனிதன் உயிரை உணவாய் கொண்டாயோ!
ஆற்காட்டார் உன் நண்பரோ என்னவோ!
உன்னை தூண்ட மின்னை துண்டித்தாரோ!
உழைப்பாளிகளின் சொத்து வியர்வை தானன்றோ!
அதன் வாடை மூலம் உன்னை கவர்தோமோ!
அவ்வகையில் யாமும் உழைப்பாளி யன்றோ!
சமுதாயமே! சமுதாயமே!
உன்னை மாற்றவா? என்னை மற்றிகொல்லவா?
திரிந்த பாலை அருந்த முடியாது
பட்ட மரத்தில் ஆணி இறங்காது
பழைய பஞ்சாங்கம் பேசி பயனில்லை
புது சரித்திரம் படைத்திட தடையில்லை
இளங் கன்றுகள் முளைத்திட வினை செய்வோம்
பகுத்தறிவும் பொதுநலமும் ஊட்டி வளர்த்திடுவோம்
சாதி மதம் என்னும் களைகள் நீக்கி
சமத்துவம் என்னும் பூக்கள் மலர செய்வோம்.